அந்த நாடுகளின் அரசாங்கச் செய்தி அமைப்புகள் அதனைத் தெரிவித்தன.
சவுதி அரேபியா கத்தாருடன் உள்ள கடல், வான்வழிப் போக்குவரத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாகக் கூறியுள்ளது. பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள அந்த முடிவை எடுத்திருப்பதாய் அது சொன்னது.
கத்தார் பயங்கரவாத முயற்சிகளுக்குத் துணை போவதாக பஹ்ரைன் குறைகூறியது. மேலும் அது தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும் பஹ்ரைன் சாடியது.
எகிப்தும் அதற்கு ஒப்பான குற்றச்சாட்டை கத்தார் மீது சுமத்தியது.
ஐக்கிய அரபு எமிரெட்சும் கத்தார் உடனான உறவை துண்டிப்பதாக அறிவித்து உள்ளது.
ஏமன் நாட்டுல் கடந்த 2 வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிராக சவுதி தலைமையிலான அரபிக் படையானது சண்டையிட்டு வருகிறது. இந்த கூட்டப்படையில் இருந்து கத்தார் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கத்தார் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்குவதாக குற்றம் சாட்டி அமெரிக்க ஊடகங்களில் செய்திகளும் வெளியாகியிருந்தது
எனினும் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் உருவாக்க விளையும் ஈரானுக்கு எதிரான அறபுக் கூட்டணியில் கட்டார் இணைவதற்கு விருப்பம் தெரிவிக்காமையே இந்த முரண்பாட்டுக்கான உண்மையான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது.(டைசி)