ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று(05) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.
இரு வாரங்களுக்குப் பின்னர் ஆணைக்குழு இன்று கூடுகின்றது. நீதிபதியொருவர் வெளிநாடு சென்றிருந்ததனால் விசாரணைகள் இரு வாரங்கள் இடம்பெறவில்லை.
கோப் அறிக்கையின் அடிப்படை தகவல்கள் பற்றி அமைச்சரிடம் விசாரணை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வசந்த டி அல்விசும் இன்று சாட்சிகள் வழங்க ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.