
கிழக்கு பல்கலைகழகத்தின் புதிய வேந்தர் வேல்முருகு விவேகானந்தராசாவைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 04.06.2017 அவரது சொந்தக் கிராமமான பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மண்டபத்தில் சிவானந்த பாடசாலை பிரதி அதிபர் கே. மகாலிங்கசிவம் தலைமையில் இடம்பெற்றது.
பாராட்டு ஊர்வலம் பழுகாமம் கண்ணன் சிலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாகச் சென்று சரஸ்வதி சிலை விபுலானந்த சிலைகளுக்கு மாலை அணிவித்ததைத் கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்றது
இதில் பிரதேச பொதுமக்கள், நலன் விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராசா பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் கடந்த 09.05.2017 முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 வருடங்களுக்கான வேந்தர் பதவிக்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.