சம்பியன் டிராபி தொடரின் முதல் போட்டியில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் காயம் காரணமாக விலகலாம் என கூறப்படுகின்றது.
இங்கிலாந்தில் இன்று முதல் சம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்காக எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும், பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் இந்தத் தொடரின் பி பிரிவில் பங்கு பற்றியுள்ள இலங்கை அணி எதிர்வரும் 3ம் திகதி தென்னாபிரிக்க அணியுடன் தனது முதல் போட்டியை எதிர்கௌ்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்தப் போட்டியில் மெத்தியூஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.