புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்..!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இதன்படி இராஜாங்க அமைச்சர்களாக லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பாலித ரங்கே பண்டார, வசந்த பராக்கிரம சேனாநாயக்க மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளதுடன், ஹர்ஷ டி சில்வா, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் கருணாரத்ன பர்னவித்தாரன ஆகியோர் பிரதி அமைச்சர்களா சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்கள்

1.லக்ஷமன் யாப்பா அபேவர்தன - அரச தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சர்

2. பாலித ரங்கே பண்டார - நீர்பாசன இராஜாங்க அமைச்சர்

3. வசந்த பராக்கிரம சேனாநாயக்க - வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

4. எரான் விக்ரமரத்ன - நிதி இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

1. ஹர்ஷ டி சில்வா - தேசிய கொள்கை மற்றும் பொருளாதார துறை பிரதி அமைச்சர்

2. ரஞ்சன் ராமநாயக்க - சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

3. கருணாரத்ன பர்னவித்தாரன - திறன் அபிவிருத்தி பிரதி அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -