மறைந்தும், மறையாத ஆளுமை முஸ்தபா சேர் -அமைச்சர் நஸீர் அனுதாபம்

சப்னி அஹமட், அபுஅலா-
ல்முனையைச் சேர்ந்த மூத்த கல்விமான் எம்.ஐ.எம் முஸ்தபா சேர் (சாரணிய ஆசிரியர்), காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.இவர், கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட உடற்கல்வி விரிவுரையாளரும், முன்னாள் மாவட்ட சாரணிய ஆணையாருமாவார். கல்வியால் ஆளுமை பெற்ற இவ்வாசனினுக்கு என்றும் தனி மதிப்பும் பெயருமுள்ளது. அனாரின் மறைவை கேட்டவுடன் மிகவும் கவலையடைந்தேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அனுதாப செய்தியில் தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் தனது அனுதாப செய்தியில்; 

சமூகத்தில் தலைசிறந்த சாரணிய ஆசானாக திகழ்ந்தவரும், அம்பாறை மாவட்ட பாடசாலைகளின் தலை சிறந்த பயிற்றுவிப்பாளராகவும்,துடிப்புள்ள ஆசிரியராகவும் அனைத்து மாணவர்களாலும் விரும்பக்கூடிய வகையில் தனது இவ்வுலக வாழ்வில் வாழும் வரை மக்கள் மனதில் வாழ்ந்த ஆசானின் இழப்பு இச்சமூகத்திற்கும் எனக்கும் பேரிழப்பாகும். 

பதவிகள் பட்டங்கள் என்பது இறைவனால் வழங்கப்படும் அருள் அதன் மூலம் இச்சமூகத்திற்கு அர்ப்பனித்து சமூக பற்றுடனும்,தனது வீர நடையுடனும் செல்லுமிடமெல்லாம் தனக்கென தனி இடத்தையும் மரியாதையும் தட்டிக்கொண்டவர் தான் முஸ்தபா சேர், தனது மாகாணத்திலும் சரி முழு இலங்கையிலும் சரி சாரணியம் என்றால் முஸ்தபா சேர் என அன்பால் அரவனைக்கும் சமூகம் அவருக்கு பின்னால் என்றும் உள்ளது.

மேலும்,  பல உயர் விருதுகளைப் பெற்ற அனாரின் சேவைக்கான மதிப்பை உணர்ந்த இச்சமூகம் அன்னாரின் இழப்பை ஏற்க மறுக்கின்றதுடன்.புனிதமான மாதத்தில் எம்மை விட்டு உயிரால் பிரிந்த அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம்நுழைய வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -