மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் பிராந்திய உலமாக்கள் கௌரவிப்பு விழா

ட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் இவ்விழாவானது 01.07.2017ஆந் திகதி சனிக்கிழமை (நாளை) பி.ப. 04.00 மணியளவில் மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.

மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவர் கே.பி.எஸ். ஹமீட் (கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர்) தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பானந்துரை தீனிய்யா அரபுக் கல்லூரியின் ஷரீஆ உயர்கல்விக் கற்கையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க். எம்.என்.எம். அன்பாஸ் (தீனி) அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

மீராவோடைப் பிராந்தியத்தைச் சேர்ந்த (மீரா ஜும்ஆ பள்ளிவாயல் மஹல்லாவிற்குட்பட்ட) மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, செம்மண்ணோடை, மாஞ்சோலை, பதுரியா நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 219 உலமாக்கள் இந்நிகழ்வில் கண்ணியப்படுத்தி கௌரவிக்கப்படவுள்ளனர்.


மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


விழா ஏற்பாட்டுக் குழு

பள்ளிவாயல் பரிபாலன சபை

மீரா ஜும்ஆ பள்ளிவாயல்

மீராவோடை.


மஹல்லாவின் பெயர்

(மஸ்ஜித்கள் வாரியானது) ஹாபிழ்கள் ஆலிம்கள் ஹாபிழ் ஃஆலிம்கள் மொத்தம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -