எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சுயாதீன தொலைக்காட்சியின் (ITN) முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர், ஊடகவியலாளர்களுக்கென்று ஏற்பாடு செய்த முதலாவது புனித ரமழான் மாத நோன்பு திறக்கும் நிகழ்வு மற்றும் இராப் போஷண விருந்தும் நேற்று (06) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொழும்பு - கொள்ளுப்பிட்டி ‘குயீன்ஸ் கபே’ ஹோட்டலில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில், “புரவலர் சில பதிவுகள்” எனும் புரவலர் ஹாசிம் உமர் செய்த சேவைகளை உள்ளடக்கியதான நூல் ஒன்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த இப்தார் வைபவத்தில் பல ஊடகங்களைச் சேர்ந்த பிரதம ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.