முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தும் ஞானசாரவை ஏன் பொலிஸ் கைது செய்யவில்லை? - ராஜித கேள்வி

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் ஞானசார தேரருக்கு தொடர்பு இருப்பது தெளிவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை ஞானசார தேரருடன் ஒப்பீடு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். விக்னேஸ்வரன் கூறுவது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும் அவர் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கோரியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஞானசார தேரர் மக்களை தூண்டுவதாகத் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை கைது செய்யுமாறு உத்தரவிடப்படடுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -