மாகாணங்களின் அபிவிருத்திகளுக்கு தடையாக இருப்பது அதிகாரங்கள் பகிரப்படாமையே-கிழக்கு முதல்வர்ரசியல் யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முறையாக அமுல்ப்படுத்தப்படாமையினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்தி பாரிய சவால்களுக்கு மத்தியி்ல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

மாகாணங்களில் ஒவ்வொரு துறைகளுக்குமான அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதும் அதற்கான நிதிகள் முறையாக வழங்கப்படாமையினால் அவை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் பல்லின கடல்வாழ் செட்டை மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்,

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர்,

மாகாணத்தில் உள்ள மக்களுக்கு உரிய நன்மைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் அமைய வேண்டுமானால் அவை மாகாண சபைகளின் மூலமாக மாத்திரமே முடியும் என்பதை நாம் உறுதியாக கூற முடியும்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இது முக்கியமான தேவையாக உள்ளது என்பதையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

ஏனென்றால் தேசிய அரசாங்கத்தின் அமைச்சுக்களால் ஒவ்வொரு மாகாணங்களும் உள்ள மக்களின் பிரச்சினைகளை சரியாக இனங்காண முடியாது,ஏனெனில் உதாரணமாக மீனவர்களை எடுத்துக் கொண்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீனவர்களின் பிரச்சினைகள் வெவ்வேறு பட்டவையாகவும் தெற்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகள் வேறாகவும் இருக்கும்,

ஆகவே அவற்றை அதன் அடிப்படை காரணங்களுடன் அடையாளங்கண்டு அதற்கு முழுமையான தீர்வை வழங்கக் கூடிய ஆற்றல் மாகாண சபைகளில் உள்ள அமைச்சுக்களுக்கே உள்ளன.

மீனவர்களுக்கு பிரச்சினைகள் வரும் போது இங்குள்ள மீனவர்கள் அவர்களின் தொழில்களையும் விட்டு விட்டு கொழும்பிலுள்ள அமைச்சுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்க முடியாது,

மாகாணங்களுக்கு உரிய நிதியும் அதிகாரமும் வழங்கப்படும் பட்சத்தில் மக்களுக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை வழங்கக் கூடியதாக இருப்பதுடன் இப்போது தேசிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை மேலும் செயற்திறன் மிக்கதாய் முன்னெடுக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,’

யூரோப்பிய ஒன்றியத்துடன் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையத்தின் திறப்பு விழாவில் ஒன்றியத்தின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்,

அத்துடன் இந்த நிகழ்வில் மீனவர்களுக்கு வாழ்வாதார உதவியும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -