வட மாகாணத்தில், பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது (படங்கள்)

பாறுக் ஷிஹான்-
டமாகாண பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வு இன்று(10) யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்றதுடன், இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின் போது 219 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.அதில் பெளதீகவியல் பாடத்திற்கு 16 பட்டதாரிகளும், இரசாயனவியல் பாடத்திற்கு 11 பட்டதாரிகளும், உயிரியல் பாடத்திற்கு 13 பட்டதாரிகளும், இணைந்த கணிதம் பாடத்திற்கு 10 பட்டதாரிகளும் உள்ளீர்க்கப்பட்டனர்.

அத்துடன் உயிரியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 15 பட்டதாரிகளுக்கும், பொறியியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 12 பட்டதாரிகளுக்கும், தொழிநுட்பத்திற்கான விஞ்ஞான பாடத்திற்கு 2 பட்டதாரிகளுக்கும் விஞ்ஞான பாடத்திற்கு 95 பட்டதாரிகளுக்கும், கணித பாடத்திற்கு 45 பட்டதாரிகளுக்குமாக நியமனங்கள் வழங்கப்பட்டன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -