கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் கறுப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
றுப்புக் கொடி கட்டி, பந்தல் அமைத்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை புதன்கிழமை (07) ஆரம்பித்துள்ளனர்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கமெராக்கள் உடனடியாக அகற்றப்படல் வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை 07.06.2017 பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர். அதனையடுத்து நிருவாகக் கட்டிடத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

'குறிப்பட்ட கால எல்லைக்குள் பட்டப்படிப்பினை பூர்த்தியாக்கு, மஹாபொல புலமைப் பரிசில் பிரச்சினையை உடனே நிவர்த்தி செய், பொய்யான தீர்வுகள் வேண்டாம் விடுதிப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய், அசாதாரணமான வகுப்புத் தடையை நீக்கு, மாணவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் சீசீரிவி கமெராக்களை உடனே அகற்று போன்ற இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்; 

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நான்கு வருடங்களில் நிறைவு செய்யவேண்டிய பட்டப்படிப்பு ஆறு வருடங்களில் நிறைவடைவதால் இரண்டு ஆண்டுகள் மேலதிகமாக வீணாக கால இழுத்தடிப்பு இடம்பெறுகிறது.

உரிய நேரத்தில் பரீட்சைகள் நடைபெற்று பெறுபேறுகளை வெளியிடுவதன் மூலம் நான்கு வருடங்களில் பட்டப்படிப்பினை மாணவர்கள் பூர்த்தி செய்ய முடியும்.சிசிரீவி கமெராக்கள் மூலம் மாணவர்கள் அவதானிக்கப்படுவதனால் தமக்கு போதுமான சுதந்திரம் இல்லை.

மாணவர்கள் நியாயமற்ற முறையில் இடைநிறுத்தப்படுகிறார்கள் நிருவாகம் மாணவர்களை பழிவாங்கும் நடவடிக்கைளை நிறுத்த வேண்டும்' என்றனர்.இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரமும் 30.05.2017 மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தரிற்கு முன்னால் திரண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -