எம்.ஏ. கீத் திருகோணமலை-
திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் இனந்தெறியாத விஷமிகளால் மண்னென்ணை குண்டு மூலம் தீ வைத்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 11.00 மணி முதல் அடுத்த நாள் காலை 3.00 மணிக்குள் நடந்திருக்களாம் என சந்தேகிக்கப்டுகின்றது ஏனெனில் குறிப்பிட்ட 4.00 மணி நேரத்திற்குள் வணக்கஸ்தலத்திற்கு முன்பாக உள்ள விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தீ வைப்பினால் வணக்கஸ்தலத்திற்கு உள்ளே தரைவிரிப்புகளில் குறிப்பிட்ட பகுதி தீயினால் கருகி உள்ளதை காணக்கூடியதாக இருந்தபோதும் ஓரு மதுபான போத்தல்களும் அதற்குள் எரிபொருளும் காணக்கூடியதாகவே இருந்தது.இச்சம்பவத்துடன் இவ்வருட 6 மாத காலப்பகுதியில் 18 வது இன மற்றும் மத ரீதியான தாக்குதல் சம்பவங்களாக அதிகரித்திருப்பது குறிப்பிடதக்கதாகும்.
மேலும் குறைந்தது 4 தொடக்கம் 5போத்தல்கள் பாவித்திருக்களாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.இதுதொடர்பில் துறைமுகப்பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.