சாய்ந்தமருது வைத்தியசாலையை வேறு வைத்தியசாலையுடன் இணைப்பதில் உடன்பாடில்லை!



எம்.வை.அமீர், யூ.கே.காலித்தீன் -

சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பள்ளிவாசல் சமூகம் என்பன சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமுக்கு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட அழுத்தத்தின் காரணமாக பிரதி அமைச்சர் எடுத்துக்கொண்ட முயற்சியின் கீழ் சாய்ந்தமருது வைத்தியசாலையை கல்முனைஅஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைத்து அபிவிருத்தி செய்வது தொடர்பில் பைசால் காசிம் முன்வைத்த வேலைத்திட்டத்துக்கு சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பள்ளிவாசல் சமூகம் என்பன அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் அதற்கான செயற்பாடுகள் நிறைவடைந்து இவ்வைத்தியசாலையை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைத்து இங்கு இப்பிராந்தியத்தில் இல்லாத முறிவு வைத்தியம் உள்ளிட்ட சில விசேட வைத்திய பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் குறித்த இணைப்பு தொடர்பில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதால் அதுதொடர்பான கருத்துக்களைப் பரிமாறும் நிகழ்வு சாய்ந்தமருது வைத்தியசாலையில் 2017-06-28 ஆம் திகதி அவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஜெஸீலுல் இலாகி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா, ஷுறா சபையின் தலைவர் வைத்தியர் எம்.ஐ.எம்.ஜெமீல் உள்ளிட்டவர்களுடன் பிரதேச வைத்தியர்கள் பொறியியலாளர்கள் பிரமுகர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஜெஸீலுல் இலாகி, தனதுரையில் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் விசேட வைத்தியப்பிரிவுகள் இங்குவருவதில் உள்ள நன்மைகள் முறிவு வைத்தியப்பிரிவு இப்பிராந்தியத்தில் இல்லாததால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு நோயாளிகள் மாற்றப்படுவது சம்மந்தான தகவல்கள் அதனால் மக்கள் எதிர்நோக்கும் கஷ்ட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.

சாய்ந்தமருது வைத்தியசாலையை மத்திய அரசுடன் இணைப்பது, விஷேட வைத்திய பிரிவுகளை கொண்டுவருவது மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைப்பது தொடர்பிலான கருத்தாடலில் வைத்தியசாலையை பிறிதொருவைத்தியசாலையுடன் இணைப்பதைத் தவிர மற்றைய விடயங்களில் தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இங்கு வைத்தியர்கள் ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் இளைஞர்களால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட அதேவேளை இடம்பெறவுள்ள கலந்துரையாடல் களில் மேற்படி கருத்துக்களை முன்வைக்குமாறு சபையோரால் முன்மொழியப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -