இன்று கல்முனையில் ஆத்மாஞ்சலிப்பிரார்த்தனை!


ல்முனையைச்சேர்ந்த நாடறிந்த கல்விமான் முன்னாள் கல்முனை பற்றிமாக்கல்லூரியின் அதிபர் அருட்சகோ. எஸ்.ஏ.ஜ.மத்தியு அடிகளாரின் முதலாவது சிரார்த்ததினம் இன்றாகும்.இன்று(06.07.2017)செவ்வாய்க்கிழமையாகும்

அன்னாரது 1வது சிரார்த்ததினத்தையொட்டி கல்முனை பற்றிமாகல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்துள்ளனர்.

இன்று மாலை பாண்டிருப்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட ஆத்மாஞ்சலி பூஜையும் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.

கல்முனைப்பிராந்திய குருமுதல்வர் பங்குத்தந்தை வண.பிதா. லியோ அடிகளார் அவ்விசேட பூஜையை நடாத்திவைப்பார் என்று பழையமாணவர்சங்கச் செயலாளர் பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:
அருட்சகோ.மத்தியூ10 அடிகளாரின் உன்னத குணத்திற்காக பாண்டிருப்பு சகோதரர் இல்லத்தில் தங்கியிருக்கும் விசேடதேவையுள்ள மாணவர்களுக்கு இன்று மதியபோசனத்தை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -