3100 ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் -

லையக பாடசாலைகளுக்கு 3100 ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாங்கத்தின் அங்கிகாரம் கிடைத்துள்ளதாகவும் அடுத்த வருடத்தில் இந்த நியமணங்கள் வழங்கப்பபடும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நேற்று ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர். நேற்று முன்தினம் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் ஆலோசகர் பாஸ்கரலிங்கத்திடம் பேச்சுவாத்தை நடத்தியதாகவும் தெரிவித்தார் இதே வேளை எதிர்வரும் ஜுலை 6 ம் திகதி பெருந்தோட்டதுறை பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் நிகழ்வு இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவும் நேற்று ஜனதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

அமைச்சர் எம.எய்ச். ஏ அலீம் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் முத்து சிவலிங்கம் மாகாண அமைச்சர்கள் எம் ராமேஸ்வரன் செந்தில் தொண்டமான் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பெருந்தோட்ட பகுதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன அதற்கான நடவடிக்கைககளுக்கு ஜனாதிபதி பெரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்
தோட்ட பாடசாலைளை தரமுயர்த்துவதோடு கணிதம் விஞ்ஞானம் உள்ளிட்ட விசேட பாடதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் இதற்கிணங்க விரைவில் 25 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


பெருந்தோட்டதுறை பாடசாலைகளில் " 3143 ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுகின்றன அதனை நிவர்த்தி செய்யும் நடவடிகைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றோம் இதற்கினங்கவே நேற்று முன்தினம் பிரதமரின் ஆலோசகர் பாஸ்கரலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -