கட்டாரில் வாழும் 150,000 இலங்கையரை வெளியேற்ற தயார் நிலையில் அரசு


“கட்டாரில் வாழும் 150,000 இலங்கையரை வெளியேற்ற தயார் நிலையில் அரசு” எனும் தலைப்பில் கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ. எஸ். பி. லியனகேவை மேற்கோள் காட்டி சில ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்ப்பாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றுடன் இலங்கையிலுள்ள கட்டார் தூதரகம் தொடர்ப்பு கொண்டு விளக்கம் கேட்டது.

அதன் போது அவர்கள் இந்த செய்தி தவறானது. தற்போதய கல நிலவரங்கள் குறித்து கட்டாரில் வாழும் இலங்கையர்கள் வீணாக அச்சம் கொள்வதற்கான எந்தவித நியாயங்களும் இல்லை என தெரிவித்தனர்.

சில வளைகுடா நாடுகள் கட்டாருடனான தமது இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டு அந்நாடு மீது விதித்துள்ள முற்றுகை அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் உட்பட அனைவரின் வழமையான வாழ்கையிலோ அல்லது அதன் பொருளாதார, வர்த்தக உறவுகளிலோ எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதை கட்டார் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறான நெருக்கடியான நிலைகளை எதிர் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைளையும் கட்டார் அரசு நீண்ட நாட்களுக்கு முன்பே மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

கட்டார் மீது விதிக்கப் பட்டுள்ள தடைகள் அந்நாட்டு பிரஜைகள் மற்றும் அங்கு வாழும் 150,000 இலங்கையர் உட்பட வெளிநாட்டவர்கள் அனைவரினதும் சாதாரண வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, மேலும் அதன் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைள் மிகவும் சுமுகமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன என்பதை கட்டார் தூதரகம் உறுதிப்படுகிறது.

எனவே, இரு நாட்டினதும் உத்தியோகப் பூர்வ ஊடக அறிக்கைகள் மற்றும் உறுதிப் படுத்தப் பட்ட பக்க சார்பற்ற செய்திகளை வெளியிடுவதன் மூலம் மாத்திரமே இலங்கை-கட்டார் நட்பு உறவுகளை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியும் என்பதை கட்டார் தூதரகம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.

கட்டார் தூதரகம்
கொழும்பு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -