இந்த விமானம் திடீரென ராடார் சிக்னலில் இருந்து மறைந்தது. தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விமானிகளை தொடர்பு கொள்ள முடியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பிற்பகல் 1.35 மணிக்கு தாவே நகருக்கு மேற்கே 20 மைல்கள் தொலைவில் சென்றபோது விமானத்தின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாகவும், விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ராணுவ தலைமை தளபதி அலுவலகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், காணாமல் போன விமானத்தின் பாகங்கள் அந்தமான் கடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாவே நகரில் இருந்து 136 மைல்கள் தொலைவில் கடலில் விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்திருப்பதாக மேக் சுற்றுலாத்துறை அதிகாரி நாயிங் லின் ஜாவ் தெரிவித்தார். கடற்படை வீரர்கள் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார். விமானப்படை வட்டாரங்களும் இதனை உறுதிப்படுத்தி உள்ளன.
விமானத்தில் 116 பேர் பயணித்ததாக முதலில் தகவல் வெளியானது. இப்போது, வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் என 106 பயணிகளும், 14 விமான ஊழியர்களும் பயணம் செய்ததாக அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.