ஏறாவூர் YSSC,மருதமுனை ஒலிம்பிக் மோதும் அரை இறுதி ஆட்டம்

எம்.ஐ.முபாறக்-ஊடகவியலாளர்-


றாவூர் YSSC விளையாட்டுக் கழகம் அதன் 45ஆவது ஆண்டு நிறைவையொட்டி கிழக்கு மாகாணரீதியில் நடாத்தும் மர்ஹூம் யூ.எல்.தாவூத் ஞாபகார்த்த சவால் கிண்ணம் மற்றும் மர்ஹூம் புஹாரி விதானையார் வெற்றிக் கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டம் YSSC மற்றும் மருதமுனை ஒலிம்பிக் அணிகளுக்கிடையில் நேற்று ஞாயிறு பிற்பகல் 4 மணிக்கு ஏறாவூர் அஹம்மட் பரீத் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

முன்னதாக YSSC அணிக்கும் கல்முனை லக்கி ஸ்டார் அணிக்கும் இடையில் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் YSSC அணி 4-0 என்ற அடிப்படையில் கோல்களைப் போட்டு அரை இறுதி இறுதி ஆட்டத்துக்குத் தெரிவானது.

அந்தப் போட்டியில் YSSC அணியின் சார்பில் எம்.முஷ்தாக் மூன்று கோல்களையும் வி.டி.மிர்ஸாத் ஒரு கோ லையும் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.இந்தச் சுற்றுப் போட்டிக்கு சரீப் அலி மன்றத்தின் தலைவர் வை.எல்.மன்சூர் அனுசரணை வழங்குகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -