முசலியூர் .கே.சி.எம்.அஸ் ஹர்-
முசலி பிரதேச செயலக்திற்கு புதிய பிரதேச செயலாளராக கே.எஸ். வசந்தகுமார் நியமிக்கப்பட்'டுள்ளார். இவர் மன்னார் பிரேதச செயலகத்தில் கடமை புரிந்தவர் என்பதும் குற்pப்பிடத்தக்கது. முசலிப் பிரதேச செயலகத்தில் நீண்டகாலம் சேவை செய்த, செ.கேதீஸ்வரன் மாந்தைப் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் திரு கேதீஸ்வரன் அவர்கள் முசலிப் பிரதேசத்தில் பிரதேச செயலாளராகக் கடமை புரிந்த காலத்தில் மீள் குடியேற்றம், ஜீவனோபாய உதவி ,வாழ்வாதார உதவி, அரசகாணி பெற்றுக் கொடுத்தல்,வீடு வழங்குதல் போன்ற விடயங்களில் மிகுந்த சேவை புரிந்துள்ளார்.
'வசதிகள் குறைந்த பிரதேசம் முசலி' என்பதனால், இங்கு கடமை புரிவதற்கு பிரதேச செயலாளர்கள் முன்வருவதில்லை.பல பிரதேச செயலாளர்கள் பின்னின்ற சரிதமுண்டு . இவ்வாறான நிலமையிலேயே திருகேதீஸ்வரன் இங்கு கடமை புரிய முன்வந்தார். இவர் ஓரு கிராமத்தைச் சேர்ந்தவன் என்பத்னாலேயே இவரால் கிராம மக்களின் ஆதங்கத்தை இலகுவில் புரிந்துகொள்ள முடிந்தது.
புதிதாக வருகை தந்துள்ள பிரதேச செயலாளர் எதிர்கொள்ளும் சவால்களாக பின்வருவனவற்றைப் பட்டியல்படுத்தலாம்.
1.மீள் குடியேற்றம் .
2.அரசகாணி கையளிப்பு.
3.ஜீவனோபாயம் .
4.சமுர்த்தி தெரிவு (புதிய பயனாளிகள்)
5.பிரதேச உட்கட்டமைப்பு வசதி.
6.உயர்பாதுகாப்பு வலய தனியார் காணிகளை விடுவித்து உரியவர்களுக்கு வழங்குதல்.
7.யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழ்,முஸ்லிம் மக்களை விருப்புடன் மீளக்குடியேறும் சூழலை உருவாக்கல்.
8.சிலாவத்துறை வைத்தியசாலையில காணப்படும் பின்னடைவுகளை சீர்செய்தல்.
9.வருகின்ற அபிவிருத்தி நிதிகளை கிராமங்களிடையே சமமாகப் பகிர்தல்.
10.வரட்சியால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட முசலி மக்களுக்கு துரிதமாக வரட்சி நிவாரணம் பெற்றுக்கொடுத்தல்.
11.பிரதேச கல்வி அடைவுமட்டத்தை கண்காணித்தல்,ஆலோசனை வழங்கல்.
