மத்திய மற்றும் மாகாண அரசுகள் இணைந்து இறக்காமம் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களான சுமார் ஐந்து சங்கங்களிலும் உள்ள 300 குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 2017.05.15 ம் திகதி இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில், இறக்காமம் முன்னாள் தவிசாளர் யூ.கே ஜபீர் மௌலவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான எம்.ஐ.எம் மன்சூர் அவர்களும் ஏனைய அதிதிகளாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், இறக்காமம் ஒருங்கிணைப்பு தலைவர் எஸ்.ஐ.மன்சூர், மீனவர் சங்க கள உத்தியோகத்தர்களான மது சங்க, எம்.எல்.எம்.இம்தியாஸ், இறக்காமம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.ஆசிக், மற்றும் சட்டத்தரணி எஸ்.எல்.பாறூக் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.





