ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் ஏறாவூர் விகாரைக்கு நஷ்ட ஈடு வழங்கி வைப்பு..!

ன்செயல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட ஏறாவூர் புனிதலாராமய விகாரைக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுத்தார். யுத்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் விசேட திட்டமொன்றுக்கு அமைய நஷ்ட ஈடு வழங்கப்படுகின்றது. இதற்கமைய குறித்த விகாரைக்கும் இரண்டரை இலட்சம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டது. 

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து இதற்கான நிதியை ஏறாவூர் புனிதலாராமய விகாராதிபதி அலுத்தர தம்மரத்ன தேரரிடம் கையளிக்கப்பட்டது. 

இதன்போது கருத்துத் தெரிவித்த அலுத்தர தம்மரத்ன தேரர், 

யுத்தத்தினால் ஏறாவூர் புனிதலாராமய விகாரை மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டது. இது குறித்து இன்னாள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் இந்த விடயம் தொடர்பில் பேசியதை அடுத்து முதற்கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுத்தார்.- என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -