அடுத்தவர்க்குக் காட்ட..!

ட்டிக் கடன் பெற்று
கட்டும் கடைகளிலே
கிட்டும் லாபத்தைப்
பெற்று வாழ்வதிலும்
பெட்டிக் கடை வைத்து
தட்டில் வடை போட்டு
எட்டும் லாபத்தில்
இருத்தல் கோடி சுகம்

தானம் தரும் போது
தானும் கூட நின்று
போணில் ஷெல்பிகளால்
போஸ்ட்கள் போடுவோரிலும்
காணா முறைகளிலே
வேணாம் பெயர் என்று
கிள்ளிக் கொடுப்பவர்கள்
நல்ல மனிதர்களே

ஆராய்ந்து ஆராய்ந்தே
அமல் ஏதும் செய்யாமல்
வீராப்புப் பேசியே
விழலாகிப் போவதிலும்
யாரப்பு இந்த அமலை
ஏற்றுக் கொள் எனக் கெஞ்சி
கேட்ட ஷஹீஹ் ஹதீஸ்க்கிணங்க
ஏற்ற அமல் செய்தல் சிறப்பு.

போதைப் பொருள் விற்று
சூதுப் பணம் பெற்று
ஓதும் தலங்களுக்கு
உதவும் மனிதரிலும்
தீதாய் உழைக்காது
ஏதோ வரும் பணத்தில்
தான் மட்டும் வாழ்பவர்
மேன்மை மிகுந்தவரே.

முடிச்சொரு மாசத்தில்
முடிச்சைக் கட்டிக் கொண்டு
பிடிச்சவளை விட்டு விட்டு
பிளேன் ஏறிப் போவதிலும்
வடிச்ச சாதத்தை
இடிச்ச சம்பலோடு
உண்டு வாழ்ந்திருத்தல்
என்றும் மகிழ்வு தரும்

சிறப்பு என்பது
சிந்தனையில் உள்ளது
இறப்பு வரும் முன்னே
இருக்கின்ற நல்லவற்றை
விருப்பமாய் செய்தவர்
வெற்றிகள் கண்டார்
அடுத்தவர்க்கு காட்ட
ஆடி ஓடுபவர்
ஓடிக் கொண்டிருப்பார்
நாடி அடங்கும் வரை..
முகம்மட் நிலூஸ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -