மீராவோடை றிழ்வான் பள்ளிவாயலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நிதி உதவி.!

எம்.ரீ.ஹைதர் அலி-
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் றிழ்வான் பள்ளிவாயலின் கட்டுமானப் பணிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து 25 சீமெந்து பக்கட்களை பெற்றுக்கொள்வதற்கான பணத்தொகையினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வழங்கி வைத்தார்.

இந்நிதியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் சார்பாக அவரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி அவர்கள் மீராவோடை மஸ்ஜித் றிழ்வான் பள்ளிவாயல் நிருவாக சபையின் தலைவர் அல்ஹாஜ். கே.எம். பாயிஸ் அவர்களிடம் 2017.05.05ஆந்திகதி-வெள்ளிக்கிழமை வழங்கி வைத்தார்.

மேலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒயொதிக்கீட்டிலிருந்து இப்பள்ளிவாயலுக்கு ஒலி பெருக்கி சாதனங்களை 2017.01.07ஆந்திகதி - சனிக்கிழமை பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வழங்கி வைத்ததோடு, இந்நிகழ்வில் வைத்து இப்பள்ளிவாயலின் கட்டுமானப் பணிகளுக்காக தனது சொந்த நிதியிலிருந்து 25 சீமெந்து பக்கட்களை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -