நாட்டில் அனைவருக்கும் ஒரே நீதி அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் இல்லாவிட்டால் எதிர்வரும் காலங்களில் தாங்களும் எவரும் அடையாளம் காண முடியாத வண்ணம் முகத்தை மறைப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயளாலர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
நாட்டில் அனைவருக்கும் ஒரே நீதியே இருக்க வேண்டும் ஒரு தரப்புக்கு ஒரு நீதியும் இன்னொரு தரப்புக்கு இன்னுமோர் நீதியும் இருக்க முடியாது.
நீதி அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் இன்று இளைஞர்களுக்கு முகம் மறைத்து ஹெல்மட் அணிய முடியாது. ஆனால் இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைத்து செல்கிறார்கள்.
நாட்டில் நீதி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்வரும் காலங்களில் நாமும் எவரும் அடையாளம் காண முடியாத வண்ணம் முகத்தை மறைத்து செல்வோம். நீதிமன்றுக்கும் செல்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.