ஏறாவூரில் பள்ளிவாசல் உண்டியல் உடைத்துத் திருட்டு..!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
றாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் நகர முதலாம் குறிச்சி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் செவ்வாய்க்கிழமை (23.05.2017) அதிகாலை உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஒரு தொகைப் பணம் திருடப்பட்டுள்ளதாக தமக்கு முறையிடப்பட்டுள்ளது என ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

பள்ளிவாசல் புனமைப்பு மற்றும் பள்ளிவாசல் நிருவாகப் பணிகளுக்காக பொதுமக்களிடமிருந்து நிதி சேகரிப்பதற்காக பள்ளிவாசலில் உண்டியல் வைக்கப்பட்டிருந்ததாக பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர். உண்டியலில் இடப்பட்டிருந்த ஒரு தொகை சில்லறைகளையும் தாள் நாணயங்களையும் திருடியவர்கள் சேதமாக்கப்பட்ட உண்டியலை கைவிட்டுச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்தவர்களே மேற்படி உண்டியல் உடைத்து திருடப்பட்டிருப்பதை அறிந்து நிருவாகத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -