எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தினால் நடாத்தப்பட்டுவரும் கலாசார போட்டி – 2017 நிகழ்வின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கமைவாக மாட்டுவண்டி ஓட்டம் மற்றும் கையிறு இழுத்தல் போட்டிகள் சனிக்கிழமை மாலை (20) அட்டாளைச்சேனை றகுமானியாபாத் கடங்கரைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
அல்-இபாதா கலாசார மன்றத்தின் கலாசார குழு தலைவரும், அதிபருமான எம்.ஏ.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல்-இபாதா கலாசார மன்றத்தின் போசகரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.பாயிஸ், கலாசார மன்றத்தின் செயலாளர் எம்.எஸ்.எம்.பாஹீம், உபதலைவர் ஏ.பீ.ஏ.கபூர், ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.