கல்முனையில் இந்திய வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாம்.!

காரைதீவு நிருபர் சகா-
ந்தியாவை சேர்ந்த காது மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாமொன்று மே 26ம் திகதி தொடக்கம் 30 ம் திகதி வரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடாத்தப்படவுள்ளது. 

கொழும்பு, கல்முனை ரொட்டரி கிளையின் (ROTARY CLUB) அனுசரணையுடன் நடைபெறவிருக்கும் காது மூக்கு ,தொண்டை தொடர்பாக சிகிச்சை பெற விரும்புபவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலை வரவேற்பு கரும பீடத்தில் தங்களது பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் என்பவற்றை மே 26 ம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்து கொள்ளுமாறு கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -