முஸ்லிம் மையவாடி அருகில் முளைத்த சிலை -இன முறுகலை ஏற்படுத்துமா?

பாறுக் ஷிஹான்-

யாழ்.கொட்டடி முஸ்லிம் மையவாடி அருகில் திடிரென ஒரு சிலை ஒரு குழுவினரால் வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஒரு குற்றச்சாட்டு அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு 6 மாதங்களுக்கு முன்னர் இச்சிலை வைப்பு தொடர்பாக அரசாங்க அதிபருக்கு அப்பகுதியில் உள்ள சமூக சேவகர் நஸீர் கடிதம் மூலமாகவும் தொலைபேசி ஊடாகவும் ஒரு முறைப்பாட்டை செய்திருந்தார். ஆனால் இச்சிலை அகற்றல் குறித்து எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.ஆனால் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் இது குறித்து அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.

எனவே இன மதங்களிற்கிடையே தேவையற்ற பிரச்சினைகளை குறித்த சிலை வைப்பு உள்ளாக்கியுள்ளதால் அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கேட்டுள்ளனர்.இது தவிர யாழ் கிளிநொச்சி உலமா சபை இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது கடமையல்லவா?

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -