மத்தியமுகாம் பிரதேசத்தில் இலவச குடிநீர் இணைப்புக்கான நிதி வழங்கி வைப்பு

த்தியமுகாம் பிரதேசத்தில் அல்-கிம்மா நிறுவனத்தின் அணுசரனையில் வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான நிதி வழங்கும் நிகழ்வு சாளம்பைக்கேணி-04 அல்-அஷானி மகளிர் சங்க தலைவி வை.நஸ்லியா தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.நஸார், அமீர் அலி விளையாட்டுக் கழக தலைவரும், அல்-அமானா சமூக சேவைகள் அமைப்பின் தலைவருமான எம்.வீ.நபாஸ், அல்-கிம்மா நிறுவனத்தின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் மௌலவி எஸ்.எம்.சலீம், ஹைரீயா ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் எம்.அலியார், நூராணிய ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.சீ.அன்வர், ஆசிரியர் எஸ்.கில்வான், மகளிர் சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பயனாலிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -