அரசியலமைப்பு சவால்கள் பற்றிய கருத்தரங்கு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கில இலங்கை மஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியலமைப்பு சவால்கள் பற்றிய கருத்தரங்கு நேற்று (15) தபால் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் முன்னணியின் தலைவர் கலாநிதி பீ.எம்.பாறுக் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உயர் கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும் கௌரவ அதிதியாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்வும், வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் என்.எம்.அமீன், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரைக்கார், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் உள்ளிட்ட பல புத்தி ஜீவிகளும், கல்விமான்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்வும் புதிய அரசியலமைப்பு மாற்றங்கள் அதன் மூலம் சிறுபான்மை மக்கள் எதிர் கொள்ளும் சாவல்கள் பற்றி விரிவாக தெளிவுபடுத்தியதுடன் நிகழ்விற்கு வருகை தந்த பிரமுகர்களிடத்தில் ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் விளக்கமளித்தனர். அத்துடன் புதிய அரசியல் அமைப்பு மாற்றத்தின் மூலம் சிறுபான்மை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்கள் தற்போது இருப்பதைவிட குறையுமானால் அதனை குறையாமல் இருப்பதற்கு தாங்கள் உத்தரவாதம் அறிப்பதாகவும் அமைச்சர் கிரியெல்ல இங்கு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் தலைமையுரையை அமைப்பித் தலைவர் கலாநிதி பீ.எம்.பாறுக் வழங்கியதுடன் வரவேற்புரை என்.எம்.அமீனும் நன்றியுரையை அமைப்பின் செயலாளர் அஸ்வடீனும் வழங்கினர். இதன்போது அமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீமாக்காரினால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -