இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்
ஐக்கிய நாடுகள் சபையின் வெசக் நிகழ்வு மற்றும் சர்வதேச வெசக் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள மோடி வெள்ளிக்கிழமை மலையகத்திற்கு பயணம் செல்லவுள்ளதுடன் அங்கு நிகழ்வுகளில் பங்கேற்று பின்னர் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்னர் மாலை 3 மணிக்கு கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




