க.கிஷாந்தன்-
இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மலையக பிரதேசமான அட்டன் பிரதேசத்திற்கு வருகை தருவதனால் அட்டன் கல்வி வலயம் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு ஒருநாள் (12.05.2017) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் 11.05.2017 அன்று விடுத்துள்ளார்.
12.05.2017 அன்று விடுமுறை அளிக்கப்படும் அட்டன் மற்றும் நுவரெலியா தமிழ் கல்வி வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20ம் திகதி வழமையான நிலையில் விடுமுறைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
