க.கிஷாந்தன்-
இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் மலையக விஜயத்தினை முன்னிட்டு 1500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் 11.05.2017 அன்று அமர்த்தப்பட்டன.சர்வதேச வெசாக் தினத்தில் கலந்துகொள்ளவுள்ள இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் 11.05.2017 அன்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார்.
அவர் 12.05.2017 அன்றைய தினம் மலையகத்திற்கு விஜயம் செய்யவுள்ளமையை முன்னிட்டு 11.05.2017 அன்று 1500 மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மோடியின் மலையக வருகையினை முன்னிட்டு மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியிலிருந்து டிக்கோயா கிளங்கன் வரை காபட் இடப்பட்டு வீதி புனரமைக்கப்பட்டுள்ளன.
அத்தோடு வானூர்திகள் தரையிரக்கவுள்ள விளையாட்டு மைதானங்களை சுற்றிவுள்ள குளவி கூடுகள் யாவும் அகற்றப்பட்டுள்ளதுடன் மலையக அரசியல் கட்சி கொடிகளாலும் மோடியின் சுவரொட்டி கட்டவுட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இவரின் பாதுகாப்பினை முன்னிட்டு அட்டன் வலயத்தற்குட்பட்ட பொலிஸாரும் வெளிமாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 1500 இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிரடிப்படை, வான்படை உட்பட இந்திய பொலிஸ் இரானுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.



