கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன இதனைக் கூறியுள்ளார்.
ராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக ராணுவப் பேச்சாளர் அத தெரணவுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, மீத்தொட்டமுள்ள குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் அரசாங்க செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (15) முற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் கூடிய கொழும்பு மாவட்ட இணைப்பு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மாலை மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 145 வீடுகள் சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்கள் கொலன்னாவை டெரன்ஸ் டி சில்வா பாடசாலையிலும் அண்மையில் உள்ள சமூக அபிவிருத்தி நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்தார்.ஷாஜில்