கல்முனையில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுவிழாவும் களியாட்டநிகழ்வும்!

காரைதீவு நிருபர் சகா-
ஹேவிளம்பி சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டும் கழகத்தின் 33வது வருட நிறைவினைக்குறிக்குமுகமாகவும் கல்முனை நியூஸ்டார் விளையாட்டுக்கழகம் கல்முனையில் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுப் போட்டியையும் களியாட்ட நிகழ்வையும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளது.

இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும் வன்னி. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்துசிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உயர்பீட உறுப்பினரும் தமிழீழ விடுதலைக்கழகத்தின் உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முரு.இராஜேஸ்வரன் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் பிரதி அத்தியட்சகர் டாக்டர் சாமி.இராஜேந்திரன் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் இலங்கை மின்சாரசபையின் கல்முனை மின்அத்தியட்சகர் ஜ.தி.சம்பந்தன் சிரேஸ்ட்ட சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து சிறப்பிப்பார்கள்.

பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் அனுசரணை வழங்குகின்றார்.

15ஆம் 16ஆம் திகதிகளில் கல்முனை நியூஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இப்புத்தாண்டுவிழா இடம்பெறும். நேற்று 15ஆம் திகதி சனிக்கிழமை காலை 7மணிக்கு 13வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது.

இன்று 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப.3மணி முதல் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. சறுக்குமரம் ஏறுதல் கயிறு இழுத்தல் தலையணைச்சமர் முட்டிஉடைத்தல் யானைக்கு கண்வைத்தல் தேங்காய்துருவுதல் கிடுகு பின்னுதல் அப்பிள் சாப்பிடுதல் உள்ளிட்ட பல பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நியூஸ்டார் கழக வீரர்களுக்கான சீருடைகளை கல்முனை சரவணாஸ் நகைமாளிகை உரிமையாளர் கே.லதன் அன்றைய தினம் அன்பளிப்புச்செய்யவுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -