சர்வதேச நாடுகளின் உயர்கல்வி முறைமைகள் பெரும்பாலும் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப அறிவினை மையப்படுத்தியே அமைந்திருக்கின்றன.
இதனூடாகவே தற்போதைய போட்டி மிக்க வர்த்தக சந்தைக்குரிய தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.
இன்று இலங்கையில் ஊடுருவியுள்ள நவீன தொழில் சந்தைக்குள் புகுவதற்கு ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப அறிவு இன்றியமையாத திறவுகோலாய் அமைகின்றன,
எவ்வாறாயினும் நவீன தொழிற்சந்தைக்கு ஏற்ப இலங்கையின் உயர்கல்வி நிறுவனங்களை மாணவர்களை தயார்படுத்துகின்றதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே ஏகோபித்த குரலில் கிடைக்கின்றது,
நவீன போட்டிமிக்க தொழிற்சந்தைக்கு ஏற்றவிதத்தில் இலங்கைப் பட்டதாரிகள் உருவாக்கப்படாமையினால் அவர்கள் தமது பட்டப்படிப்பிற்கு பின்னர் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளதுடன் அரச நியமனங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி இருக்கின்றனர் என்பதுடன் கிழக்கில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர்.
நாடு முழுவதும் இந்தப் பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் பல போராட்டங்களும் நடைபெற்றும் வருகின்றன.
இந்தப் போராட்டங்களில் மத்திய அரசை எதிர்த்தே எதிர்ப்புக் கோஷங்கள் ஒலிக்க, கிழக்கில் மாத்திரம் ஏனைய எட்டு மாகணங்களுக்கும் மாற்றமாக கிழக்கின் முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படுவது வேடிக்கையான விடயமாகும்.
உதாரணமாக அண்டை மாகாணமான வட மாகாணத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படாமல் அவர்களும் காலவரையற்ற போராட்டத்ததை ஆரம்பித்துள்ளதுடன், அவர்களுள் எவரும் அந்த மாகாண முதலமைச்சருக்கு எதிராக கோஷங்களையோ கருத்துக்களயோ தெரிவிக்காமையை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
இதன் மூலம் கிழக்கில் அரசியல் கலப்புடனான பட்டதாரிகளின் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது என்ற சந்தேகமும் அல்லது உண்மையாக போராடும் பட்டதாரிகளுக்குள் சில கறுப்பு ஆடுகள் புகுந்து அவர்களின் தூய நோக்கத்தை மாற்ற முயற்சி்க்கின்றனரா என்ற சந்தேகமும் எழுகின்றது.
பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினையென்பது தேசிய ரீதியான பிரச்சினை என்பதை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து குரல்கொடுத்தால் அல்லது சபாநாயகருடன் கதைத்து பிரேரணையொன்றை கொண்டு வந்தால் இவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதில் எள்ள்ளவும் சந்தேகமில்லை.
ஏனெனில் பாராளுமன்றத்திலேயே பிரதமர், உயர்கல்வி அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர்’ இருக்கும் நிலையில் 15 உறுப்பினர்களும் ஒரே குரலில் இந்தப் பிரச்சினையை எடுத்துரைப்பதன் ஊடாக இதற்கான தீர்வை எப்போதோ பெற்றிருக்கலாம் என்பதில் எவருக்கும் என் கருத்தோடு முரண்பாடு இருக்கமென்று நினைக்கவில்லை,
கிழக்கு பட்டதாரிகளுக்கான நியமனம் 2012 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லையானால் 2012 ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத்திலேயே இருக்கும் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களாலோ அல்லது மாகாண சபையின் அமைச்சர்களாக இருந்தவர்களலோ எதையும்செய்ய முடியாமல் போய் இருக்கின்றது என்பதே நிதர்சனம்,
இந்நிலையில் அவர்களின் சட்டைகளைப் பிடித்து கேள்விகேட்காமல் 2015 ஆம் ஆண்டுபெப்ரவரி மாதம் முதலமைச்சராக பதவியேற்று தனது அதிகாரத்தையும் தாண்டி பல சாதனைகள் படைத்த ஹாபிஸ் நசீர் அஹமட் இதுவரை கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமனம் பெற்று வந்த ஆசிரியர்களை தமது மாகாணத்தில் இனி நியமிக்கப்பட வேண்டும் எனப் போராடி புதிய சரித்திரம் படைத்தவர்,
அதற்கு முன்னெல்லாம் எத்தனைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கில் இருக்கின்றார்கள் நாம் பாடசாலையிலிருந்து வெ ளியேறி பாராளுமன்ற கதிரையில் தான் அமர்நதோம் என மார் தட்டும் அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள் அவர்கள் இந்த ஆசிரியர்களுக்கு நியாயத்தைப்பெற்றுக் கொடுக்கப் போராடியிருக்கின்றார்களா இல்லை,ஆனால் அறிக்கைகள் மாத்திரம் ஐ.நா வரை பாயும்,
கடந்த காலத்தில் இருந்த சரித்திரத்திரத்தையே தாம் பதவியேற்று சில மாதங்களிலேயே மாற்றிக் காட்டிய வல்லமை இந்த முதலமைச்சருக்கின்றி யாருக்குள்ளது.
இவ்வாறு பலர் அதிகாரமிருந்தும் பதவியிருந்தும் செய்யாத பல காரியங்களை செய்தமையினால் தானோ இத்னை எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் இவர் மீது கொட்டப்படுகின்றன.
பரவாயில்லை காய்க்கின்ற மரத்துக்குத் தானே கல்லடி கிடைக்கும் என்பார்கள்,
இத்தனை காலமும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் மாத்திரமே தமது பிரதேசங்களின் அபிவிருத்திக்கு நம்பியிருந்த மக்களுக்கு மாகாண சபையினாலும் இவை அனைத்தும் முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் இவர்.
இதனால் தானோ இவர் சிறுபான்மை அமைச்சர்களாலேயே அமைச்சரவைக் கூட்டங்களில் விமர்சிக்கப்பட்டார்,இனவாத அமைச்சர்களுடன் இணைந்து இவர் மீது குரோத குற்றச்சாட்டுக்கள் குவிக்கப்பட்டன,
தமது மாகாணத்திற்காக பல சலுகைகளை பெறுவதற்காக இத்தனைப் போராட்டங்களை மேற்கொண்டமையால் விமர்சனங்களை எதிர்நோக்கும் தமது மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து நாம் என்ன செ ய்கின்றோம்,
கிழக்கு மக்களே இவரைப் போல் ஒரு முதலமைச்சர் இன்மையால் தெற்கு மக்கள்,மத்திய மாகாண மக்கள்,வட மத்திய ,வடமேல் என ஒவ்வொரு மாகாணங்களிலும் உள்ள மக்கள் ஏங்குகின்றனர்,
ஏன் அங்கெல்லாம் முதலமைச்சர் என்பவர் பதவியை அலங்கரிப்பவராக மாத்திரமே இருக்கின்றார் என்பதை அங்கு சென்று பார்ப்பவர்களுக்குத் தெரியும்,
தமது சொந்தப் பிரச்சினைக்காகவன்றி பட்டதாரிகளினதும் வேலையற்றவர்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் பிரதமரையும் ஜனாதிபதியையும் சந்திக்கின்ற முதலமைச்சரைக் கண்டதுண்டோ ஏன் வடக்கு முதலமைச்சர் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்காக சந்தித்தார் எனக்கேட்டதுண்டா?
அது மாத்திரமே கிழக்கு முதலமைச்சர் வெ ளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வேலையற்றோரின் பிரச்சினையையும் பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவையும் வழங்குவதற்கான உதவியையே கோருவார் என்பதற்கு அந்த நிகழ்வுகளை படம் பிடிக்க வரும் ஊடகவியலாளர்களே சாட்சி.
‘சேர் இதைத் தவிர அரசியல் ரீதியாக ஏதாவது பேசுங்களேன்’ என ஊடகவியலாளர்களே கூறுகின்ற அளவுக்கு ஊடகங்களுக்கு தீனிபோடாமல் ஐநா அதிகாரிகளை சந்தித்தாலும் மக்கள் பிரச்சினைகளையே முன்வைக்கின்ற முதலமைச்சர் அவர்,
ஆனால் மக்கள் இலகுவில் எதையும் மறந்து விடக் கூடியவர்கள் என்ற உண்மை மட்டும் அவருக்குதெரியாமல் போயுள்ளமைதான் கவலைக்குரிய விடயம்.
ஆனால் இதை நன்கு புரிந்துவைத்திருக்கும் அரசியல்வாதிகள் மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசி நன்றாக படம் காட்டிச்செல்கின்றனர்,
இவர்களைத் தான் மக்களும் தலைமேல் தூக்கி கொண்டாடுகின்றனர் பட்டதாரிகளும் அதற்கு விதி விலக்கல்ல.
அவர்களை நேரில் சந்தித்து தீர்வொன்றைப் பெற்றுத் தராமல் வெற்று வார்த்தைகளைக் கூறிவிட்டுச் சென்றால் வீர்ர்கள் ,அவர்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமான வரை முயன்று நல்ல பதிலுடன் சந்திப்போம் என்ற உறுதியுடன் காத்திருப்பவர்கள் அவர்களுக்குகெட்டவர்கள்,
35 வயதாக இருந்த நியமன வயதெல்லையை 40 ஆக மாற்றிய முதலமைச்சருக்கு நாம் நன்றி கூற மாட்டோம் 45 ஆக மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிக்கு துணை நிற்க மாட்டோம் ஆனால் குறை கூற மட்டும் முன்னிற்போம்,
ஆளுனருக்கு அடி பணிந்து செல்லாத்தால் தான் கிழக்கு முதலமைச்சருக்கு நியமனங்களைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என சிலர் கூறுகின்றார்கள் .ஆம் அது தான் நூற்றுக்கு நூறுவீதமான உண்மை.
யார் கால்களிலும் மண்டியிட்டு உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் முதலமைச்சருக்கு இல்லையென்பதுடன் அவ்வாறு பெறப்படும் உரிமையை தன் மானமுள்ள எந்தவொரு சிறுபான்மை குடிமகனும் விரும்புவதில்லை என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
சிறுபான்மை சமூகம் தலை நிமிர்ந்து நின்று உரிமைகளைபெற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி யார் கால்களையும் எச்சிற்படுத்தி அல்ல. அவ்வாறு பெறப்படும் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமே அளவிலா மதிப்புண்டு என்பதையே சரித்திரங்கள்சொல்கின்ற உண்மை.
கிழக்கு மாகாணத்தில் எத்தனை வெற்றிடங்கள் உள்ளது என்பதையே அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ அறிந்திராத பட்சத்தில் 5021வெற்றிடங்கள் கிழக்கில் உள்ளதுடன் கிழக்கின் நிர்வாகத்துறை வலுப்படுத்தப்பட வேண்டுமானால் இந்த வெற்றிடங்கள் உடனடியாக நிரப்ப்ப்ட வேண்டுமென ஒவ்வொரு மேடைகளிலும் முழங்கியவர் கிழக்கு முதலமைச்சரே என்பதை மறுப்பதற்கில்லை.
கிழக்கில் பட்டதாரிகளின் பிரச்சினையைத் தீர்க்க கிழக்கு முதலமைச்சர் எந்த நொடியும் தயாராவே இருக்கின்றார்,மாகாண சபைக்கு இதற்குரிய நிதி வழங்கப்படுமாயின் ஒரே நாளில் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும் என்பது யதார்த்தம்செய்ய வேண்டியதெல்லாம் பட்டதாரிகளின் பிரச்சினையைத் தீர்க்க கிழக்கு மாகாண சபைக்கு நிதி வழங்க வேண்டும் என கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் ஒரே குரலில் முழங்க வேண்டும்,அதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழுத்தம்கொடுக்க பட்டதாரிகள் தயாரா?
எனவே உண்மைகளை உணர்ந்து பேசுதலே காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது .