விளக்கமறியலில் உள்ளோரைப் பார்ப்போருக்கு கட்டுப்பாடா..?- அஸ்வர் கேள்வி

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
விளக்கமறியலில் உள்ளவர்களை காணச் செல்வதனைத் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் குற்றஞ் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆண்டாண்டு காலமாக உள்ள முறைக்கும் ஏனைய நாடுளிலுள்ள நடைமுறைக்கும் இணங்க விளக்கமறியலில் உள்ளவர்களைப் பார்ப்பது சம்பந்தமாக அவர்களுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுமதி வழங்குவது வழக்கமாக இருந்து வந்தது. இப்போது ஏராளமானவர்கள் விளக்கமறியலில் உள்ளவர்களை காணச் செல்லுகின்றமையினால் அதன் மூலமாக அங்குள்ளவர்களின் மனம் மாறி அரசாங்கத்திற்கு மாறிச் செல்வார்கள் என்ற அச்சத்தின் காரணமாக தற்காலிக சிறையில் உள்ளவர்களை காண்பதற்கு தடைசெய்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது பெரும் அராஜகச் செயலாகும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ள மிகவும் அநாகரிகமான,அமானிச, இன விரோத சக்திகளுக்கு ஒப்ப இந்த நாட்டிலும் விடயங்கள் நடைபெறுகின்றனவா? என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப வேண்டியிருக்கின்றது. எனவே இவைகளை விட்டு விட்டு அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏராளம். ஏராளம் அவைகளைத் தீர்ப்பதற்கு அரசிடம் இருந்து உத்தரவாதங்களைப் பெறுமாறு முஸ்லிம் முற்போக்கு முன்னணி வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.

90 வீதமான முஸ்லிம்கள் வாக்களித்தார்கள் என்று கூறுவார்களானால் ஏன் இந்த அங்கலாய்ப்பு? ஏன் இந்த அழுகைக்குரல்? மௌலவி ஆசிரியர் நியமனம், மாணிக்கக் கல் வியாபாரம் முதல் வீதியிலே அங்காடி வியாபாரம் செய்கின்ற சாதாரண முஸ்லிம் வியாபாரிகள் வரை எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், ஒட்டோ சாரதிகள் போன்ற இன்னோரன்ன பொதுமக்கள் பலவாறும் கஷ்டத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாகி இருப்பது ஏன்? என்ற கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -