நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கார் நிறுத்துமிடத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளனர். நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்க அரசாங்கம் தங்களுக்கு இடம் ஒதுக்கித் தரவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதனாலேயே தாம் கார் நிறுத்தும் இடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்துகின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டளஸ் அழகப்பெரும,கெஹலிய ரம்புக்வெல்ல,வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளனர்.