நிரப்பப்படாத இடைவெளி......................

ஜெம்சித் (ஏ) றகுமான்-

முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மாற்றியமைத்த உன்னத தலைவன் மறைந்த மாமனிதர் அஷ்ரஃப் தன்னகத்தே வைத்திருந்த இலங்கை முஸ்லிம்களுக்கான "தேசியத் தலைவன்"என்ற தலைமைத்துவ வெற்றிடம் இன்று வரை நிரப்பப்படாத இடைவெளியாகவே இருக்கிறது.ஆளுமையின் பரிணாமமாக திகழ்ந்த மறைந்த தலைவரின் குணவியல்புகளின் ஒன்றேனும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் என இன்று தங்களை அடையாளப்படுத்தி இருப்பவர்களிடம் இல்லை என்பதை அவர்களின் நடத்தைகளைக் கொண்டு தீர்மானிக்க முடிகிறது.

முஸ்லிம் தலைமைகள் என தங்களை அடையாப்படுத்தி இருக்கும் தலைமைத்துவங்கள் சமூக நோக்கங்களை மறந்து சுய நல நோக்கங்களை நிறைவேற்றி கொள்ள தங்களது அதிகாரங்களை பிரயோகிக்கின்றனர்.சமூகப் பற்றானது அரசியல் தலைவர்களிடம் இருந்து மாய்ந்திருக்கிறது.சாணக்கியத் தலைவர்,தேசியத் தலைவர்,மக்கள் தலைவர் என பெயரளவில் மட்டும் தலைமைத்துவத்துவத்தை அடையாளப்படுத்தியுள்ளனர்.

தேர்தல் காலங்களில் வாக்குறுதி பட்டியல்களை வாசித்து விட்டுச் செல்லும் சில அரசியல் தலைவர்கள் தேர்தல் முடிவடைந்த பின்னர் வாக்குறுதி கொடுக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதுமில்லை.சில நேரம் அந்த பகுதிகளுக்கு சென்றாலும் 40Km தூரத்திற்கு அப்பால் நின்று எட்டிப் பார்த்து விட்டு சென்று விடுகின்ற ஓர் அவல நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது.பாத்திரமரிந்து பிச்சை போடு என்ற பழமொழிக்கான ஆழ்ந்த கருத்தை இன்று எம் சமூகம் புரிந்திருக்கிறது.

தலைவர்கள் என அடையாளப்படுத்தி இருக்கும் இன்னும் சிலர் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து முஸ்லிம் மக்கள் மத்தியில் தலைமைத்துவத்திற்கான வெறுப்பூட்டலை ஏற்படுத்தி விட்டது.ஆளுமை நிறைந்த தலைமையை முழுத் தேசியம் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறான ஒரு தலைவர் இன்று எம் மத்தியில் இல்லை.இது யார் விட்ட தவறு?என்று இனியும் நாம் சிந்தித்து நாட்களை வீணடிப்பதில் எந்த இலாபமும் இல்லை.இதற்கான வழி என்ன?என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கான விடை இளம் தலைமுறையிடமே இருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என வாய் வார்த்தைகளால் முழங்கும் பெரும்பாலனவர்கள் இளைஞர்களுக்கான களங்களை அமைத்து கொடுப்பதற்கு தயங்கி நிற்கின்றனர்.
இளைஞர்களின் சூடான இரத்ததை கொதிப்படைய செய்து அவர்களை பசை வாளி அரசியலோடு நிறுத்தி விடுகின்ற அரசியல்வாதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர்.

சிறந்த ஆளுமை,அர்ப்பணிப்பு,தியாகம்,தனிமனித
நடத்தை,சமூக பற்று போன்ற காரணிகளை
கொண்ட இளைஞர் அணியிடத்தில்
அரசியல் அதிகாரம்
கைமாறப்படுதல் வேண்டும்.அவ்வாறான ஓர் மாற்றம் வருகின்ற போதே முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றி கொள்ள முடியும்.இளைஞர்களின் அரசியல் தேவை உணரப்படல் வேண்டும்.இளைஞர்களை கறிவேப்பிலையாக பயன்டுத்தும் முஸ்லிம் அரசியல் தன்மை மாற வேண்டுமாயின் கட்சிக்கு கண் மூடி வாக்களிக்கும் பற்றாளர்களுக்கு தலைமைத்துவத்தின் முக்கியத்துவம்,இளைஞர்களின் தேவை,தற்போதைய அரசியல் போக்கு மாற்றீட்டின் அவசியம் என்பன உணர்த்தப்பட வேண்டும்.

இளைஞனிடத்தில் முஸ்லிம் சமூகத்தின் நேர்மையான அரசியல் அதிகாரங்களை ஒப்படைத்து மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் முன் வர வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -