கல்முனை - சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான திட்டமிடல் பணிகளின் முன்னேற்றம் தொடர்பானகலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை (04) கல்முனை மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்திட்டமிடல் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
இக்கலந்துரையாடலைத் தொடந்து கல்முனை - சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான திட்டமிடல் பணிகளின்முன்னேற்றங்களை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் நற்பிட்டிமுனை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சுர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான அப்துல் றஸாக் (ஜவாத்),ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர், முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட துணைத் தலைவர் அப்துல் மஜீட், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர்மன்சூர் ஏ. காதிர், அமைச்சின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகரசபை முன்னாள் முதல்வர் நிஸாம் காரியப்பர், உயர்பீடஉறுப்பினர்களான பளீல் பி.ஏ, ஏ.சி. யஹியாகான் உள்ளிட்ட அமைச்சின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


