வில்பத்து பிரச்சினையில் ஜமியத்துல் உலமா சபையின் தலையீடு.!

வில்பத்து பிரச்சினை சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அகில இலங்கை ஜமியதுல் உலமாசபயின் அழைப்பின்பேரில் நேற்று (3௦.03.2017) இரவு மக்ரிப் தொழுகையின் பின்பு உலமாசபையின் கட்டத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 

இதில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பிரதி அமைச்சர் பைசால் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், நியாஸ், கபூர் மற்றும் ஜுனைட் மவுலவி ஆகியோர் இதில் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் ஜனாதிபதிக்கு அழுத்தம் வளங்கும் பொருட்டு பின்வரும் மூன்று முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

முஸ்லிம்களது பிரதேசத்தை வில்பத்து விரதேசத்துடன் இணைத்துக்கொண்ட 2௦12 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலை ரத்துச்செய்தல். தற்போது சர்ச்சையினை ஏற்படுத்திய வில்பத்து பிரதேச விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள 2௦17.௦3,27 ஆம் திகதிய வர்த்தமானியை ரத்து செய்தல். (இந்த வர்த்தமானி மூலம் சுமார் எண்பதாயிரம் ஏக்கர் நிலம் வில்பத்துவுடன் இணைக்கப்பட்டுள்ளது.)

விசேட ஆணைக்குழு ஒன்றினை நியமித்து அதன் மூலம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை போன்றவற்றுக்கு அரசியல் விளையாட்டுக்களுக்கு அப்பால் உண்மையான தீர்வினை காணுதல். போன்ற மூன்று முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. இன்று பின்னேரம் (31.௦3.2௦17) ஜனாதிபதியை சந்திக்க இருக்கின்ற நிலையில் மேற்கண்ட தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடனும், ஏனயவர்களுடனும் கலந்துரையாடல் நடைபெற இருக்கின்றது. 

மூடிய அறைக்குள் எப்போதோ பேசி தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த பிரச்சினை, சில அரசியல் வாதிகளின் தனிப்பட்ட அரசியல் விளையாட்டு காரணமாகவே இன்று இந்த அளவுக்கு ஊதி பெருப்பிக்கப் பட்டுள்ளது. 

எனவேதான் உலமாசபையின் தலையீடு மூலம் சில அரசியல் வாதிகளின் தனிப்பட்ட அரசியலுக்காக பயன்படுத்துகின்ற இந்த வில்பத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பது எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -