காத்தான்குடி பிரதான வீதியில் இருக்கும் அரிசி ஆலை ஒன்றில் இன்று காலை பாரிய சத்தத்துடன் ஆலையின் நீராவி கொதிகலன்
வெடித்துச் சிதறியுள்ளது.
இன்று காலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனால் உயிரிழப்போ, காயங்களோ எவருக்கும் ஏற்படவில்லை. குறித்த வெடிப்புச் சம்பவத்தில் அரிசி ஆலை மற்றும் கடை ஒன்றின் களஞ்சியசாலை போன்றவற்றுக்கு பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அருகிலுள்ள சில வீடுகளுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
அரிசி ஆலைக்கு சுமார் 5 இலட்சம் ரூபாவும், கடை களஞ்சியசாலைக்கு ஐந்து இலட்சம் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (வீ)