பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை 'மனாரியன்ஸ் விங்ஸ்-06' (ஆயசரவாயஅரயெi ஆயயெசயைn'ள றுiபௌ-06) ஏற்பாட்டில் மருதமுனை கடற்கரைப் பிரதேசத்தைத் துப்புரவு செய்யும் பணி சனிக்கிழமை(25-03-2017)காலை முதல் மாலை நடைபெற்றது.
இந்த சிரமதானப்பணியில் 'மனாரியன்ஸ் விங்ஸ்-06' உறுப்பினர்கள்,அரச உத்தியோகத்தர்கள்,சமூக சேவையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மருதமுனை கடற்கரைப் பிரதேசத்திற்கு மருதமுனை மக்களோடு அயல் கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்,தமிழ்,சிங்கள மக்களும் பெருமளவில் தினமும் வருகை தருகின்றனர்.
இந்த வருகையின் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவு வளர்ந்து வருகின்றது இதன் மூலம் பரஸ்பர புரிந்துணர்வும் ஐக்கியமும் ஏற்படுகின்றமை மன மகிழ்சியை தரகின்றது.
இருந்த போதிலும் இங்கு வருகின்றவர்கள் அனைவரும் திரும்பிச் செல்லும் போது பெரும் தொகையான குப்பைகளை விட்டு விட்டுச் செல்கின்றனர் இதனால் அழகான மருதமுனை கடற்கரைப் பிரதேசம் குப்பைகளால் நிறைந்து விடுகின்றன.
இந்த குப்பைகளை பெரும் மனம் கொண்ட இளைஞர் அமைப்புக்கள் அவ்வப்போது சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்து வருகின்றனர்.குப்பைகளைப் போட்டு விட்டுச் சென்று விடுகின்றனர்.
குப்பைகளைப் போட்டுவிட்டுச் செல்கின்றவர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும் இன்று குப்பைகளைப் போட்டுவிட்டு நாளை அதே இடத்தில்தான் வந்த அமர வேண்டும் ஆகவே சற்று சிந்தியுங்கள்.
வருகின்றவர்கள் குப்பைகளை ஒரு இடத்தில் போடுவதன் மூலம் அவற்றை அகற்றுவதற்கு இலகுவாக இருக்கும் எனவே இனிமேல் குப்பைகளை ஒரு இடத்தில் போடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
மற்றவர்களுக்கும் ஆலோசனை வழங்குங்கள் இந்த சிரமதானத்தைச் செய்த 'மனாரியன்ஸ் விங்ஸ்-06' யைப் பாராட்டுவோம்.