எம்.ரீ. ஹைதர் அலி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் துவிச்சக்கர மற்றும் மோட்டார் வண்டிகளுக்கு பெச் இடும் தொழிலில் ஈடுபடும் விஷேட தேவையுடைய நபர் ஒருவருக்கு அவரது சுய தொழிலினை மேம்படுத்தும் முகமாக பெச் இடும் இயந்திரம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
தன்னுடைய சுய தொழிலினை மேம்படுத்துவதற்காக பெச் இடும் இயந்திரம் ஒன்றினை தனக்கு பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளல் ஷிப்லி பாறுக்கிடம் குறித்த நபர் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தார்.
அதற்கமைவாக தனது 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்வியந்திரத்தினை பெற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குறித்த துவிச்சக்கர மற்றும் மோட்டார் வண்டிகளுக்கான பெச் இடும் தொழிலாளிக்கு 2017.03.25ஆந்திகதி-சனிக்கிழமை நேரடியாகச் சென்று கையளித்தார்.