அபாயகர மாவட்டமாக திருகோணமலை: அப்துல்லா மஹ்ரூப் எம்.பி

ஹஸ்பர் ஏ ஹலீம்-
ண்மைக் காலமாக கிண்ணியாவில் பரவி வருகின்ற டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப் படுத்தும் வரை கிண்ணியா வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உருப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான அப்துல்லா மகருப் பணிப்புரை விடுத்தார்.

திங்கட்கிழமை (27) இடம் பெற்ற கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இணைத்தலைவராக கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களில் 20க்கு அதிகமான மாணவர்கள் காய்ச்சல் என்ற காரத்தால் பாடசாலை அதிபரின் அனுமதியுடன் இடை நடுவில் வீடுகளுக்கு செல்கின்றனர். மேலும் பாடசாலை சூழலிலும் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகமான காணப்படுவதை அவதானிக்கவும் முடிகிறது. எனவே கல்வித் திணைக்களத்தின் ஊடாக ஆளுனர் மட்டத்தில் இதற்கான நடவடிக்கையை மேற் கொள்ள கடிதம் மூலம் அறிவிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பான ஆலோசனைகள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நுளம்பை கட்டப் படுத்தக் கூடிய புகை அடிக்கும் கருவிகள் 05ம் அதற்குறிய உத்தியோகத்தர்களும் வந்துள்ளனர். கிண்ணியாவில் இதுவரை 03 பேர் இந்த டெங்கு நோயால் இறந்துள்ளதுடன் 400க்கும் அதிகமானவர்கள் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகி கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அகில இலங்கை ரீதியாக திருகோணமலை மாவட்டமானது டெங்கு நோய் தாக்கத்தில் அபாயகரமான மாவட்டமாகவுள்ளது என சுகாதார திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -