எம்.ரீ.எம்.பாரிஸ்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தின் முதலாவது இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நாள நிகழ்வு வெகுவிமர்சையாக நேற்று 28.02.2017 செவ்வாய்க்கிழமை அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று முடிந்தது.
பாடசாலையின் அதிபர் ஏ.சீ.எம். அஜ்மீர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். இதன்போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜூனைட் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள்,அதிபர்கள் என பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது இப்பாடசாலை மாணவிகளது உடற்பயிற்சி கண்காட்சி பலரையும் கவர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வழங்கி வைத்தார்.






