விவாதத்தின் பின்னர் இஸ்லாத்தை ஏற்ற அமெரிக்க லெப்டினன்ட் கேர்ணல்.!

எஸ்.ஹமீத்-
வரது பெயர் மைக்கல் பார்ன்ஸ் (Michael Barnes). அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் அலெக்ஸ்சாண்டிரியாவைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் கிறிஸ்தவத்தின் மீது மிக்க பக்தி கொண்டதும் அதற்காக வாதாடுகின்றதுமான ஒரு குடும்பம். மைக்கல் கூட கிறிஸ்தவத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடுடையவர். குறைந்தது வாரம் மூன்று முறையாவது அவர்களின் குடும்பம் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு வழிபாட்டுக்குச் செல்லும். ஜார்விஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் கற்ற மைக்கல் பார்ன்ஸ் தனது 23 வது வயதில் அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார்.

அமெரிக்கப் படையில் இணைந்த அவர் ஒரு முறை ஜெர்மன் நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது அங்கே ஒரு முஸ்லிம் சிப்பாயைச் சந்திக்க நேரிட்டது. அந்த முஸ்லிம் சிப்பாய் எப்போதுமே இஸ்லாத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். இஸ்லாத்தின் நல்லொழுக்கங்களை அந்தச் சிப்பாய் அடிக்கடி எடுத்துச் சொல்லும் போதெல்லாம் மைக்கல் பார்ன்ஸுக்கு எரிச்சலும் கோபமும் வரும். எனவே, அந்த முஸ்லிம் சிப்பாயைப் பகிரங்க விவாதமொன்றுக்கு அழைக்க முடிவு செய்தார்.

ஆயிற்று. அந்தச் சிப்பாயும் விவாதத்துக்கு ஒத்துக் கொண்டார். 30 அமெரிக்கப் படை வீரர்கள் கொண்ட ஒரு கூட்டத்தில் பகிரங்க விவாதம் ஆரம்பமானது. 'கிறிஸ்தவமும் இஸ்லாமும்' என்ற தலைப்பில் விவாதம் அமைந்திருந்தது.

அந்த விவாதத்தில் என்னதான் நடந்தது...? மைக்கல் ஆழமாக அதனை விபரிக்கமால் மிகச் சுருக்கமாகச் சொல்கிறார். ''அந்த விவாதத்தின் போதான முஸ்லிம் சிப்பாயின் சக்திவாய்ந்த வசப்படுத்தும் இஸ்லாம் பற்றிய உண்மைகள் என்னைக் கூனிக் குறுக வைத்தது. அத்தோடு உண்மையான நம்பிக்கையின் மொத்த ஒளி என்னை ஆட்கொள்ளத் தொடங்கியதை நான் உணர்ந்தேன்!''

அந்த விவாத வேளையின் அதிர்வுகளை மீட்கிறார் மைக்கல்: '' அறிவின் சத்தத்தில் அலைமோதிக் கொண்டிருந்த முரண்பாடுகள், மனதை ஆக்கிரமித்திருந்த அழுத்தங்கள் எல்லாமே அந்த நேரத்தில் உண்மையாகவே என்னைவிட்டும் வெளியேறிவிட்டன. ஒரு பலமான நம்பிக்கை என்னைத் தழுவுவதை அப்போது நானுணர்ந்தேன். ஒரு மனித நேயமுள்ளவனாக நான் யார் என்பதும் என்பதும் இதுநாள் வரையான எனது நம்பிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதும் என்னை அந்த நேரத்தில் உலுக்கத் தொடங்கிவிட்டன.

அதன் பின்னர் தனது ஓய்வு நேரங்களிலெல்லாம் குர்ஆனையும் பைபிளையும் ஆழ்ந்து படிக்கத் தொடங்கினார் மைக்கல். இரண்டு வருட இடைவிடாத படிப்பின் மூலம் அவர் இஸ்லாத்தின் உயர்ந்த சித்தாந்தங்கள் எவையென்பதைத் தெரிந்து கொண்டார். அதன் பின்னர் அவர் ஷஹாதாக் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தனது பெயரை காலித் ஷாபாஸ் (Khallid Shabazz) என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்து லில்லாஹ்!

தற்போது காலித் ஷாபாஸ் அமெரிக்கப் படையணியில் லெப்டினன்ட் கேர்ணல் தரத்திலமர்ந்து பணியாற்றுகிறார். மூன்று முதுமானிப் பட்டங்களுக்கும் இரண்டு கலாநிதிப் பட்டங்களுக்கும் சொந்தக்காரரான காலித் ஷாபாஸ் தனது பொறுப்பிலிருக்கும் 14,000 போர் வீரர்களில் தேவையானோருக்கு மனநல அறிவுரைகள் வழங்கும் (counseling) பணியினையும் செய்து வருகிறார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -