மறைந்திருந்து திடீரென வீதிக்கு வந்து வாகனங்களை நிறுத்தவேண்டாம் -பொலிசாருக்கு உத்தரவு

இல்ஹாம்-
வீ தியில் மறைந்திருந்து ஒரே முறையில் தாவிப்பாய்ந்து வாகனச்சாரதிகளைப் பிடிக்க வேண்டாமெனப் பொலிஸாருக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை வாகனப்போக்குவரத்து குற்றவியல் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க விடுத்துள்ளார். வாக னப்போக்குவரத்துப் பொலிஸார் வாகனசாரதிகளுக்கு தெரியும் வகையில் வீதிகளில் கடமையில் இருக்கலாம்.

மறைந்திருந்து திடீரென வீதிக்கு வருவதால் சாரதிகளுக்கு அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. பொலிஸாரின் இச்செய்கை குறி த்து முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இதனால் பொலிஸாரும் அபகீர்த்திக்கு உள்ளாவதாகவும் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பலமுறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் அநேக பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் மறைந்திருந்து வாகன ஓட்டி களைப் பிடித்து வழக்குத் தாக்கல் செய்வதாக அவர் தெரிவித்தார். இந்த விடயமாக சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட வகுப்புக்களை நடத்தி அறிவூட்ட வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -