பா.திருஞானம்-
வாய் பேசும் மனிதன் மரங்களை அழிக்கின்றான் வாய் பேச முடியா மரங்கள் மனிதனை அரவணைக்கின்றன என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சரின் இனைப்புச் செயலாளர் மு. துறைசாமி அவர்கள். களனி திரானந்த பாடசாலையில் நடந்த இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெறிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர். பிள்ளைகளே நான் தற்போதைய கல்வி முறையை பற்றியோ அபிவிருத்தியை பற்றியோ எதையும் பேச மாட்டேன். அது குறித்து பேசுவதற்கு நிறைய புத்திஜீவிகள் இங்கு உள்ளார்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில உபதேசங்கள் பற்றி பேசலாம் என எண்ணியுள்ளேன்.
இப்பாடசாலையில் சிங்கள மாணவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம் மாணவர்களும் சிங்கள மொழியில் கல்வி கற்பதாக தெரிகின்றது. இன ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசுவதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை என்பதை கூறிக் கொள்கின்றேன். அத்துடன் என்னிடம் இருக்கும் இந்த அழைப்பிதலை பார்க்கும் போது அது மேலும் உறுதியாகின்றது. எப்படி என்றால் இங்கு தலைமை பீடத்தில் வீற்றிருப்பது எமது அமைச்சு பிரிவெனா பிரிவின் பேராசிரியர் தலைமை தேரர் அவர்கள் ஆனால் இந்த மேடையில் பேசிக் கொண்டிருப்பது மு.துரைசாமி அவர்கள் இதை விட ஒற்றுமை நமக்கு தேவைபடுமா?
நாம் அனைவரும் இன ஒற்றுமையை பற்றி பேசுகின்றோம் ஆனால் சிங்கள மாணவர்களுக்கு சிங்கள பாடசாலையும், தமிழ் மாணவர்களுக்கு தமிழ் பாடசாலையும,; முஸ்லிம் மாணவர்களுக்கு முஸ்லிம் பாடசாலையும் இருக்கும் ஒரு நாட்டில் இன ஒற்றுமையை பற்றி எப்படி பேசுவது. கல்வி சீர்த்திருத்தங்களை பற்றி பேசும் எமது அமைச்சிலும் இதே நிலை தான் ஆனால் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகள் ஒன்றாக இருந்து கல்வி கற்கும் பாடசாலைகள் நம் நாட்டில் உள்ளன. அவை சர்வதேச பாடசாலைகள் ஆகும். இந்நிலையை ஏன் நம் பாடசாலைகளில் உருவாக்க முடியாது.
இன்று நடைபெற்ற இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவை எடுத்துக் கொள்வோம். இதன் மூலமாக இந்த பிள்ளைகள் நம் சமூகத்திற்கு நல்லதொரு விடயத்தை கூறியுள்ளனர், என நினைக்கின்றேன். அது என்ன விடயம்? நமக்கு தெரியும் இவ்வாறான விழாக்களின் போது பல இல்லங்கள் ஒன்றாக போட்டியிடுகின்றன ஆனால் இறுதியில் ஒரு இல்லம் மாத்திரமே வெற்றிப் பெறும். அப்போது ஏனைய தோல்வியை தழுவிய இல்லங்களின் பிள்ளைகள் என்று சேர்ந்து வெற்றி பெற்ற இல்லத்திற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களை வாரி அழைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இம்மாதிரியான நிகழ்வுகளை நாம் எல்லா இடங்களிலும் காண முடியாது. ஆதிகாரங்களுக்கும், சொத்துக்களுக்கும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்கின்றார்கள் கடுமையான விமர்சனங்களை மேற்கொள்கின்றார்கள்.
ஆனால் அவர்கள் ஒரு போதும் நினைப்பது இல்லை நாம் இந்த உலகத்தில் நாம் தரித்து நிற்பது தற்காலிக இடங்களில் என்பதை இந்த மாணவர்களை பார்க்கும் போது எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு செல்லக்கூடிய மிக சக்தி வாய்ந்த பிள்ளைகள் என்பது நன்றாக தெரிகின்றது. விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகளும் நல்லதொரு பயிற்சியையும் வழங்கி சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு எமது அமைச்சும், விளையாட்டு அமைச்சும் அர்ப்பணிப்புடன் சேவை புரிகின்றது.
விளையாட்டு துறையில் மட்டுமல்லாது எந்த ஒரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதற்கு நல்ல சூழல் நமக்கு அமைய வேண்டும். சுற்றாடல் மற்றும் சூழல் பற்றி நாம் கதைக்கின்றோமே தவிர அதை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்கின்றோம்? மரங்களும், கொடிகளும் இல்லாவிட்டால் நமக்கு வாழ முடியாது ஆனால் இன்று நிலை முற்றிலும் மாறியுள்ளது. இன்று வன அழிப்புகள் மிக பாரதூரமான விதத்தில் நடந்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்காக போராட்டம் நடத்துபவர்களை நாம் அன்புடன் வரவேற்க வேண்டும். ஒரு மரத்தை வணங்குவது எவ்வளவு மேலான விடயம் என்பதை நான் இரு கவிதை வரிகளில் கூற விரும்புகின்றேன்.
' வாய் பேசும் மனிதன் மரங்களை அழிக்கின்றான்.
வாய் பேச முடியா மரங்கள் மனிதர்களை அரவணைக்கின்றது'
நாம் அனைவரும் புத்த பிரானின் போதனைகனை கேட்கின்றோம், போயா தினங்களில் சீலங்களை கடைப்பிடிக்கினறோம், பன்சலைக்கு செல்கின்றோம் ஆனால் நமது கொள்கைகளை எடுத்துக் கொண்டால் வனத்திலே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இதை தான் சிறந்த பாடகரான எட்வாட் ஜயகொடி அழகான பாடல் மூலமாக வெளிப்படுத்துகின்றார்.உங்கள் அனைவருக்கும் சிறந்த பிரார்தனை ஒன்று இருக்;க வேண்டும். நீங்கள் இறைவனை வணங்குவது என்றால் அவரிடம் இதை கேளுங்கள்.' இறைiவா என்னால் எதை எல்லாம் மாற்ற முடியுமோ அதை மாற்றக் கூடிய வலிமையை எனக்கு கொடு. ஏன்னால் மாற்ற முடியாதவை எவை என்று கண்டுக் கொள்கின்ற அறிவை எனக்கு கொடு. என்னால் மாற்ற முடிந்தது மாற்ற முடியாதது.
இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பகுத்தரிந்து புரிந்துக் கொள்கின்ற பக்குவத்தை எனக்கு கொடு' என்னுடைய இந்த சிறிய சொற்பொழிவில் உங்களுக்கு தேவையான சில விடயங்களை கூறியிருக்கின்றேன் என நினைக்கின்றேன், கூறுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருந்தாலும் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சரை பற்றி கூறுவது பொருத்தமானதாக இருக்கும். 15 வருடங்களுக்கு மேலாக கல்வி துறையை ஏற்று கடமை புரிந்த மிக அமைதியான மனித நேயம் படைத்த ஒருவர் என்று என்னால் கூறமுடியும். அவர் மத்திய மாகாண சபையில் கல்வி துறையை ஏற்று பணிபுரியும் போது அவருடன் இணைந்து பணி புரியும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
2000 தொடக்கம் 2004 வரை நாங்கள் இருவரும் இணைந்து கல்வி துறையை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றினோம். இது குறித்து மக்கள் இன்றும் பெருமையுடன் பேசிக் கொள்கின்றனர். அது போலவே எங்களுடைய தற்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் இருவரும் இணைந்து கல்வி துறையை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர், என்னை விட இங்கு தலைமை பீடத்தில் வீற்றிருக்கும் தலைமை தேரர் நன்கு அறிவார் பிள்ளைகளே நீங்கள் கல்வி கற்கும் பாடசாலைக்கு ஒத்துழைத்து அபிமானத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் பெற்றோர் வழங்கும் அறிவுரைகளை ஏற்று பாடசாலையின் பெருமையை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.
